பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' என்கிற படத்தில் நஸ்ரியாவின் காதலராக நடித்தவர் ரோஷன் மேத்யூ. நிவின்பாலியுடன் இணைந்து நடித்த 'மூத்தோன்' படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அதிரவைத்தார். அந்தப்படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்,. தான் இந்தியில் இயக்கிய 'சோக்ட்' என்கிற படத்திலும் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார்.
இவரின் இந்த வளர்ச்சியை பார்த்து தான் தமிழில் அஜய் ஞானமுத்து டைரக்சனில் உருவாகிவரும் கோப்ரா படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. இன்னொரு பக்கம் பாலிவுட்டில் ஆலியா பட்டுக்கு ஜோடியாக 'டார்லிங்ஸ்' என்கிற படத்தில் நடித்து முடித்தும் முடித்துவிட்டார் படப்பிடிப்பு இறுதி நாளன்று ஆலியா பட்டுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளதன் மூலம். தனது சந்தோஷை வெளிப்படுத்தியுள்ளார் ரோஷன் மேத்யூஸ். .