ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கடந்த வருடம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம், தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. பிஜுமேனன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் நடித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் ராணாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக தற்போது நித்யா மேனன் இணைந்துள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அந்த இரண்டு கதாநாயகிகளில் இவர் யாருடைய கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பது பற்றிய தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அதில் பிரித்விராஜ் மனைவியாக சில காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவரது மனைவியாக நடிப்பார் என்றே தெரிகிறது.
காரணம் கதைப்படி கிராமத்து பெண்ணாக போலீஸ் அதிகாரியின் மனைவி என்றாலும், அதேசமயம் நியாயத்துக்காக போராடும் நக்ஸலைட் போலத்தான் அந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஒரிஜினலில் அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது.