ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாள சினிமாவை பொருத்தவரை நடிகர் திலீப் மட்டும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், விதவிதமான கெட்டப்புகளையும் விரும்பி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது நண்பர் நாதிர்ஷா டைரக்ஷனில் கேசு இ வீட்டின்டே நாதன் என்கிற படத்தில் நடித்துள்ளார் திலிப். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவ்வப்போது இடைவெளி விட்டு நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தில் அரசுவேலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதான கிழவராக நடித்திருக்கிறார் திலீப். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஊர்வசி.
சமீபத்தில் கூட தலையில் பாதிக்கு மேல் முடி இல்லாமல், துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு தொப்பை வயிற்றுடன், சோப்பு போட்டு குளிப்பது போன்று திலீப் காட்சி அளிக்கும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. நடிகர் திலீப் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறை சென்று தற்போது ஜாமினில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வரும் வாய்ப்பை பயன்படுத்தி கிடைத்தவரை லாபம் என கமர்சியல் படங்களில் நடித்து காசு பார்த்துவிட்டு போகாமல், தனது ஆத்ம திருப்திக்காக விதவிதமான கதாபாத்திரங்களை தேடி அவர் நடிப்பது, அவர் மீதான பிரமிப்பை அதிகரிக்கிறது.