காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். பிஜூமேனன், பிரித்விராஜ் இருவரும் நடித்திருந்த இந்த படத்தை மறைந்த இயக்குனர் சாச்சி இயக்கியிருந்தார். இந்தநிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவர் நடிப்பில் ரீமேக்காகிறது.. மலையாள ஒரிஜினலில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல, இந்த இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை இணைத்து தான் டைட்டில் கூட வைத்திருப்பார்கள்.
ஆனால் தற்போது பிஜூமேனன் கேரக்டரில் பவன் கல்யாண் நடிக்கும் பீம்லா நாயக் என்கிற கதாபாத்திர பெயரை மட்டுமே டைட்டிலாக வைக்க போகிறார்கள் என்கிற பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமல்ல பவன் கல்யாணின் கதாபாத்திரத்தை இன்னும் சற்று மாஸாக காட்டுவதற்கான வேலையும் நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியால் ராணாவின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
மேலும் இதுபோன்ற ரீமேக்குகளில் இப்படி ஏதாவது சில விஷயங்களை தேவையில்லாமல் மாற்றும்போதுதான் ஒரிஜினலில் பெற்ற வெற்றியை ரீமேக்கில் பெறமுடியாமல் போய்விடுகிறது. பாடிகார்ட், த்ரிஷ்யம் போன்ற மலையாள படங்கள் அதன் ஜீவன் கெடாமல் ரீமேக் செய்யப்பட்டபோது தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கும் அப்படி ஒரு வெற்றியை ருசித்தால் தான் அதன் ஒரிஜினலை ரசித்தவர்கள் சந்தோஷப்படுவார்கள்.