ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இதுநாள் வரை தெலுங்கு திரையுலகில் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்த நடிகர் சங்கத் தேர்தல், இந்த முறை கிட்டத்தட்ட மும்முனை போட்டிகளால் களைகட்ட தொடங்கியுள்ளது. விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், இளம் நடிகர் மஞ்சு விஷ்ணு, மற்றும் சீனியர் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தலைமையின் கீழ், கிட்டத்தட்ட 27 பேர் கொண்ட வலுவான கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். தனது குழுவில் இணைந்து போட்டியிட இருக்கும் உறுப்பினர்களையும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்
சீனியர் நடிகை ஜெயசுதா, நடிகர் சாய்குமார், ஸ்ரீகாந்த், நாகிநீடு அனசுயா, பிரகதி, பிரம்மாஜி என பல பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ்ராஜ் தலைமையில் போட்டியிட உள்ளனர். இதில் நடிகர் சாய்குமார் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது.