ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் நரேஷின் பதவிக்காலம் முடிவடைவதால் விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, நடிகை ஜீவிதா ஆகிய மூன்று பேரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். இதனால் தற்போது தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நேரத்தில் பிரகாஷ்ராஜை கன்னடர் என்றொரு விசயத்தை முன்வைத்து எதிரணியினர் பிரச்சாரம் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான பாண்ட்லா பிரகாஷ் என்பவர் குரல் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பிரகாஷ்ராஜ் தெலுங்கர் அல்ல, கன்னடர் தான். ஆனால், ஐதராபாத்தில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை
தத்தெடுத்துள்ளார். அந்த மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வளர்ச்சிப் பணிகளை ஆற்றி வருகிறார். அந்த அளவுக்கு தெலுங்கு மக்களுக்காக அவர் சேவை செய்கிறார். அப்படிப்பட்ட அவரை வெளி மாநிலத்தவர் என்று பிரித்துப்பேசுவது தவறு என்று பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அதோடு, ராஜமவுலி, பிரபாஸ் போன்றவர்கள் எல்லாம் இன்றைக்கு தேசிய அளவில் பிரபலமாகி விட்டனர். அவர்களையெல்லாம் மற்ற மொழியினர் புறக்கணித்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? கலைஞர்களை மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.