நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
மலையாள திரையுலகில், சக போட்டியாளர்களாக கருதப்படும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஈகோ பார்க்காமல் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பரிமாறிக் கொள்வதும், முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுகூடி தங்களது சந்தோசங்களை பரிமாறிக் கொள்வதுமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், மலையாள சினிமாவில் இளம் நடிகர்களில் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகிய மூவரும், தங்களது நட்பு வட்டத்தை ரொம்பவே பேணி காத்து வருகிறார்கள். அதற்கு மிக முக்கியமாக, பின்னணியில் இவர்களது மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படி சமீபத்தில் அவர்கள் தங்களது மனைவியருடன், ஒரு கெட் டுகெதர் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் ஒன்றை பஹத் பாசிலின் மனைவியான நடிகை நஸ்ரியா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எல்லாம் எந்த விவரத்தையும் நஸ்ரியா வெளியிடாததால், ரசிகர்களின் பார்வைக்காக மட்டுமே இதை வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்த மூவரின் ரசிகர்களும் இவர்களது நட்பை பார்த்து ஆச்சரியப்பட்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்