ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இந்தியாவிலேயே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க மற்றும் நடிகர் சங்க தேர்தல் தான் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொருவரும் தங்களது கவுரவ பிரச்சனையாக நினைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட தெலுங்கு திரையுலக நடிகர் சங்க தேர்தலும் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.
விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட தயாராகி வருகிறார் என ஏற்கனவே ஒரு செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு போட்டியாக இளம் நடிகரும், நடிகர் மோகன்பாபுவின் மகனுமான மஞ்சு விஷ்ணு தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளாராம். சிரஞ்சீவி குடும்பத்தினரின் ஆசியுடன் விரைவில் விஷ்ணு மஞ்சுவின் பெயர் இந்த போட்டியில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.