ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் மோகன்லால் நடித்த லூசிபர் மற்றும் பிரித்விராஜ் நடித்த டிரைவிங் லைசன்ஸ். இந்த இரண்டு படங்களின் தெலுங்கு ரீமேக் உரிமையையும் நடிகர் ராம்சரண் கைப்பற்றியுள்ளார். இதில் லூசிபர் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவிருக்கிறார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்தநிலையில் டிரைவிங் லைசன்ஸ் படத்தின் ரீமேக்கிற்கும் உரிய நட்சத்திரங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளாராம் ராம்சரண்.
மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் படத்தின் நாயகர்களாக நடித்திருந்தனர். ஒரு பிரபல சினிமா ஹீரோவுக்கும், அவரை கடவுளாக ஆராதிக்கும் ஒரு மோட்டார் வாகன ஆய்வாளருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் தான், இந்த படத்தின் கதை. பிரித்விராஜ் ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு மோட்டார் வாகன ஆய்வாளராகவும் நடித்திருந்தனர் தெலுங்கில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ரவிதேஜாவும் சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் வெங்கடேஷையும் இணைந்து நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளாராம் ராம்சரண்.




