வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
உலகெங்கும் சகோதரர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் பலர் சகோதரர் தின வாழ்த்துக்களையும் பதிவுகளையும் வெளியிட்டாலும், தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சிறுவயது சிரஞ்சீவி தனது கையில் இளைய சகோதரர் நடிகர் பவன் கல்யாணை தூக்கி வைத்தபடி நின்றிருக்க, அருகில் அவர்களது இன்னொரு சகோதரர் நாகபாபு நிற்கிறார். சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த புகைப்படத்தில் பவன் கல்யாணை சிரஞ்சீவி தூக்கி வைத்திருப்பதை பார்க்கும்போது, சினிமாவிலும் அவர் நல்ல உயரத்திற்கு வரவேண்டும் என ஒரு சகோதரனாகவும் அடித்தளமிட்டு தந்ததை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.