சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வருபவர் பின்னணி பாடகி மதுபிரியா. சாய்பல்லவி நடித்த பிதா' படத்தில் 'வச்சிண்டே' என்கிற பாடலை பாடிய இவர், மகேஷ்பாபு நடித்த 'சரிலேறு நீக்கெவரு' படத்தில் ஹிட்டான 'ஹே சோ க்யூட்' பாடலையும் பாடியுள்ளார்.
இவர் தற்போது சோஷியல் மீடியா மூலமாக, மர்மநபர்கள் சிலர் தனக்கு தேவையில்லாத போன் அழைப்புகள் மற்றும் அருவறுக்கத்தக்க கமெண்ட்டுகள் மூலமாக தொந்தரவு கொடுத்து வருவதாக சைபர் கிரைம் போலீசில் ஈமெயில் மூலமாக புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு வந்த போன் அழைப்புகளுக்கான எண்களையும் அவர் போலீஸில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 509, 354(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், இதற்கென ஒரு தனி குழுவை நியமித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பெண்களின் பிரச்சனைகளில் முக்கிய கவனம் எடுத்து செயல்பட்டு 'அவள் (SHE) போலீசார் வசம் இந்த வழக்கை மாற்றவும் முடிவு செய்துள்ளனராம்.