பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
பழம்பெரும் தெலுங்கு காமெடி நடிகை பவள சியாமளா. சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2019ல் மதுவடலரா படம் வெளியானது. இதுதான் அவர் நடித்த கடைசி படம்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இவர் அவதிப்பட்டார். தற்போது அவர் வறுமையில் வாழ்ந்து வருகிறார். அவரது கணவரும் இறந்து விட்டார். ஒரே மகளும் நோய்வாய்பட்டுள்ளார். இதனால் தான் வறுமையில் வாடுவதாகவும், மருந்து வாங்ககூட பணம் இன்றி தான் பெற்ற விருதுகளை விற்று மருந்து வாங்கி வருவதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த தகவலை கேள்பிப்பட்ட சிரஞ்சீவி, பவள சியாமளாவிற்கு 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தின் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். சிரஞ்சீவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.