டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தல் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பதற்காக, முதலில் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகு, அவர் விலகிக்கொள்ள, பாபிசிம்ஹா அதில் நடிப்பதாக பேச்சு அடிபட்டது. இந்தநிலையில் அந்த கதாபாத்திரத்தின் பஹத் பாசில் நடிக்கிறார் என கடந்த மாதம் உறுதியானது.
சில வருடங்களுக்கு முன்பு. ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் சிலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. இதில் வில்லத்தனம் கொண்ட மோசமான காட்டிலாகா அதிகாரியாக தான் பஹத் பாசில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழர்கள், செம்மரக்கடத்தல் என்கிற சர்ச்சை பின்புலத்தில், கதை நகர்வதால் தான், இதில் நடிக்க விரும்பாமல் விஜய்சேதுபதி விலகி கொண்டதாகவும், பஹத் பாசில் மலையாளி என்பதால், அவரை வைத்து, இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து கொள்ளலாம் என்பதால் தான், அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.




