ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொரோனா முதல் அலை கடந்த வருடம் தீவிரமடைந்த சமயத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரையுலக பிரபலங்கள், லட்சங்களிலும் கோடிகளிலும் நிதி உதவியை அள்ளித் தந்தனர். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது தான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபல நட்சத்திரங்கள் தங்கள் தரப்பிலிருந்து உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை விட, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
அந்தவகையில் தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ பொருட்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள தனது சொந்த மருத்துவமனையில் இருந்து, ஆந்திராவில் தான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது ஹிந்துபூர் தொகுதியில் உள்ள கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்காக இந்த மருந்துகளை அனுப்பி வைத்துள்ளார் பாலகிருஷ்ணா.