பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் |
கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிருத்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.
இந்தநிலையில் நிவின்பாலி நடித்துவரும் துறைமுகம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுதேவ் நாயர். இந்தப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக தொப்பை வளர்த்து நடித்துள்ளார் சுதேவ் நாயர். இயல்பிலேயே பாடி பில்டரான சுதேவ் நாயருக்கு உடல் எடையை கூட்டுவதும் குறைப்பதும் கைவந்த கலை என்பதால், ரொம்பவே எளிதாக தொப்பை வளர்த்து, தற்போது அதை கரைத்து ஸ்லிம் ஆகவும் மாறிவிட்டார்.