'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சன்னி வேயோன், ஹனி ரோஸ், ராஜேஸ்வரி பொன்னப்பா நடித்துள்ள மலையாள படம் அக்குவாரியம். இந்த படம் கேரளாவில் வாழும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கையை பற்றியதாகும். இந்த படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்று கேரள கன்னியாஸ்திரிகள் சிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது கொரோனா காலம் என்பதாலும், ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் தேவை இல்லை என்பதாலும் படத்தை நாளை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு தடைகேட்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஜெஸ்ஸி மணி என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "இந்த படம் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளை அவதூறாக சித்தரிக்கிறது. அவர்களின் பாலியல் பிரச்சினைகள் பற்றி தவறாக பேசுகிறது. 2013ம் ஆண்டு பிதாவினம் புத்ரானம் பரிசுத்தாதம்வினம் (பிதா சுதன் பரிசுத்த ஆவி) என்ற பெயரில் தயாராகி தணிக்கை சான்று மறுக்கப்பட்ட படம். தற்போது அக்குவாரியம் என்ற பெயரில் ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தற்காலிக தடை விதித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.