ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
மோகன்லால் நடிப்பில் பிரமாண்ட வரலாற்று படமாக உருவாகியுள்ள படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. இயக்குனர் பிரிதயர்தஷன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் இந்தப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்தப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் தான் தயாரித்துள்ளார். இந்தப்படத்திற்கு விருது கிடைத்ததை தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் சிலருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். மேலும் இந்த விருதை இந்திய கடற்படைக்கு அர்ப்பணிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மோகன்லால்.
அதற்கு காரணமும் உள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்த குஞ்சாலி மரைக்கார் கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். இந்த மரைக்கார் கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடித்துள்ளார்.