இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி |

அல்லுஅர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படங்கள் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று கேரளா ஆலப்புழாவிற்கு அருகிலுள்ள பன்னமடா ஏரியில் நடைபெற்ற 66வது நேரு டிராபி படகுப் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அல்லு அர்ஜூன், கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மனைவி சினேகா ரெட்டியும் கலந்து கொண்டார். கேரள கவர்னர் பழனிசாமி சதாசிவம் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து அல்லு அர்ஜூன் தனது டுவிட்டரில், எனக்கு இந்த கெளரவத்தை வழங்கியதற்காக கேரளா அரசுக்கும், கேரள மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.