அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழில் சுசீந்திரனை போல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மாறிவிட்டார் என்றே தெரிகிறது.. ஆம்.. சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் என மூன்று படங்களை அடுத்தடுத்து விரைவாக இயக்கி முடித்துவிட்டார்.
இதே பாணியில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிந்தியில் இம்ரான் ஹாஸ்மி, வேதிகாவை வைத்து தான் இயக்கிவந்த 'பாடி' என்கிற படத்தை 39 நாட்களில் முடித்தார். அந்தப்படம் முடித்த கையோடு மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க ஆரம்பித்தார்.
கடந்த செப்-1௦ஆம் தேதி துவங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெறும் 42 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது. இதை தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வரும் ஜீத்து ஜோசப், நடிகர் கார்த்தியை தனது அடுத்த படத்தில் இயக்கவுள்ளார்.