பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? |

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். தமிழில் ஒரு பக்க கதை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் இதுவரை வெளிவரவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்து வெளிவந்த மீன் குழம்பும் மண்பானையும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது 5 மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து சந்தோஷன் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியிருப்பதாவது: மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்து கொடுத்து விட்டேன். அடுத்து மலையாளத்தில் படம் இயக்குகிறேன். இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படம். இந்தியாவின் முன்னணி டெக்னீஷியன்கள் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். காளிதாஸ், மஞ்சுவாரியார் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஷோபின் ஷாகிர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அக்டோபர் 20ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.