தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் |
மலையாளத்தில் மம்முட்டி நடித்த படம் ராஜாதிராஜா. 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடித்திருந்தார். இவர்களுடன் ஜாய் ஜோர்ஜ், சித்திக், சிஜாய் வர்க்கீஸ், ஆசிம் ஜமால் நடித்திருந்தனர். கார்த்திக் ராஜா, கோபிசுந்தர், பெமி ஆகியோர் இசை அமைத்திருந்தனர். ஷாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். அஜய் வாசுதேவ் இயக்கி இருந்தார். குட் லைன் புரொடக்ஷன் சார்பில் எம்.கே.நாசர் தயாரித்திருந்தார்.
மனைவி குழந்தை என சந்தோஷமாக வாழும் மம்முட்டியை போலீசார் அண்டர் கிரவுண்ட் தாதாக்களுக்கு உதவி செய்தவர் என்று திடீரென கைது செய்கிறது. சம்பந்தமே இல்லாமல் அவரை கைது செய்து துன்புறுத்தி பின்னர் அவரை விடுதலை செய்கிறது. போலீஸ் விடுதலை செய்தாலும் தாதா குரூப் அவரை நிஜமான தாதா என்று நினைத்து தொல்லை கொடுக்கிறது.
அவர் போலீசில் முறையிட்டும் பலன் இல்லை. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. தற்போது இந்தப் படத்தை தமிழில் நான்தான் ராஜா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். மில்லினம் சினிமா சார்பில் ஷாஜி மில்லினம் வெளியிடுகிறார். நாளை வெளிவருகிறது.