போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நீண்ட நாளைக்குப்பின் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு வெற்றியை சமீபத்தில் வெளியான ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் படம் மூலம் ருசித்துள்ளார் மம்முட்டி. பத்திரிகை, சோஷியல் மீடியாவின் பாசிட்டி விமர்சனங்களும் வசூல் ரிப்போர்ட்டுகளும் இந்த வெற்றியை உறுதி செய்துள்ளன. படம் வெளியான அன்று இரண்டாவது காட்சியில் இருந்தே படத்தை பற்றிய மவுத் டாக் பரவ ஆரம்பித்து பல இடங்களில் ஹவுஸ்புல் போர்டு தொங்கவிடப்பட்டது.
அன்றைய தினமே படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மம்முட்டி, நேற்று படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.. மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியராக இருந்த ஷாஜி படூர் இந்தப்படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.