ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ஜெய்சிம்ஹா. இந்த படம் ஜனவரி 12ல் வெளியாகிறது. அதையடுத்து அப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் பாலகிருஷ்ணா.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தான் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான ஹிந்துப்பூர் தொகுதியில் நடை பெற்ற பசவதாரகாம் மெமோரியல் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்திருக்கிறார் பாலகிருஷ்ணா.
மேலும், அந்த போட்டியில் பங்கேற்ற இளைஞர்களுடன் சிறிது நேரம் தானும் கிரிக்கெட் விளையாடி அவர்களை உற்சாகப்படுத்திய பாலகிருஷ்ணா, சுயநம்பிக்கையுடன் ஒவ்வொரு விசயத்திலும் செயல்பட வேண்டும் என்று அவர்களிடம் சொல்லி உற்சாகப்படுத்தி விட்டு விடைபெற்றிருக்கிறார்.