அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் |
மலையாளத்தில் வெளியாகிய 'பிரேமம்' படத்தில் பி.டி.மாஸ்டர் கேரக்டர் மூலம் புகழ்பெற்ற காமெடி நடிகர் தான் சௌபின் ஷாஹிர். இதையடுத்து துல்கர் சல்மானுடன் இணைந்து நான்கு படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் சௌபின் ஷாஹிர்.
அடிப்படையில் டைரக்சன் டிபார்ட்மென்ட்டை சேர்ந்த இவர், பிரபல இயக்குனர்களான பாசில், சித்திக், ரபி மெக்கார்டின், அமல் நீரத் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். இவர் துல்கரை நடிக்க வைத்து 'பறவ' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார்.
நடிப்பு டைரக்சன் என இரண்டிலும் சாதித்த பின்புதான் திருமணம் என முடிவு செய்திருந்த இவர், தற்போது ஜமீலா என்பவருடன் திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. விரைவில் திருமண தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.