சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் | 'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 |
நடிகை பார்வதி (மேனன்) குறைவான படங்களில் மட்டுமே நடிக்க காரணம், வாய்ப்பு கிடைக்காததால் அல்ல.. வாய்ப்பை தேடி பார்வதி நகராதது தான் காரணம்.. அந்தவகையில் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்கும் பார்வதி, பிருத்விராஜின் 'மை ஸ்டோரி' படத்தில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து மீண்டும் பிருத்விராஜுடன் இணைந்து மீண்டும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
இந்தநிலையில் பாலிவுட் படம் ஒன்றிலும் சத்தமில்லாமல் நடித்து முடித்துவிட்டார் பார்வதி. படத்தின் பெயர் 'க்வாரபி க்வாரபி சிங்கிள்'. 'துஷ்மன்', 'சங்கர்ஷ்' ஆகிய படங்களை இயக்கிய தனுஜா சந்திரா இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக இர்பான் கான் நடித்துள்ளார்.
“ஒருவர் மற்றவருக்காக வாழ்வது இல்லை சாவது போன்ற வழக்கமான கதையல்ல உங்களுடைய காதல் கதை” என்கிற இந்தப்படத்தின் டேக்லைனே வித்தியாசமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் கவனம் ஈர்க்கும் விதமாகவே இருக்கின்றன. நவ-1௦ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.