தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இதில் இளையராஜா இசை அமைத்த புகழ்பெற்ற பாடல்களான 'இளமை இதோ இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்...', 'என் ஜோடி மஞ்சக் குருவி...' ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
படம் தியேட்டர்களில் ஓடி முடிந்த நிலையில் ‛‛குட் பேட் அக்லி படத்தில் எனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், இது பதிப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. நான் இசையமைத்த பாடல்களை இந்த படத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'' எனக் கூறி இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று(செப்., 8) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த மூன்று பாடல்களையும் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் விளக்கம் கேட்டு விசாரணையை இரண்டு வாரத்திற்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
முன்னதாக, படத்தில் பயன்படுத்திய இளையராஜாவின் இந்த பாடல்களின் உரிமம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் அனுமதி பெற்றே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தயாரிப்பு தரப்பு ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




