பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
1984ல் கேரளாவில் புகழ்பெற்ற கொலை வழக்கு தான் சாக்கோ கொலை வழக்கு. சுகுமார குறூப் என்கிற கிரிமினல் தன்னுடைய இன்சூரன்ஸ் பணம் 8 லட்ச ரூபாயை குறுக்கு வழியில் பெறுவதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாட, தன்னைப்போலவே இருந்த சாக்கோ என்பவரை உயிருடன் காரில் வைத்து எரித்துக் கொன்றான்.
பின்னாளில் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது. ஆனாலும் போலீஸில் அவன் சிக்கவில்லை.. முப்பது வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக சொல்லப்படும் அவனை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த சுகுமார குறூப்பின் வாழ்க்கை தற்போது படமாக இருக்கிறது. அந்த கேரக்டரில் தான் துல்கர் சல்மான் நடிக்கிறார்..
'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். சினிமாவுக்காக இந்த சுகுமார குறூப் கேரக்டரில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்களாம். பொதுவாக கிரிமினல்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும்போது அவர்களை ஹீரோவாக காட்டுவது தான் வாடிக்கை. ஆனால் இந்தப்படத்தை பொறுத்தவரை சுகுமார குறூப்பின் நல்லது, கெட்டது என இரண்டு பக்கங்களையும் சரிசமமாக காட்ட இருக்கிறோம் என்கிறார் துல்கர் சல்மான். குறிப்பாக சுகுமார குறூப்பின் புகழ்பாடும் படமாக இது இருக்காது என உறுதியாக கூறுகிறார் துல்கர் சல்மான்.