ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‛மதராஸி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில், இந்த படம் கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 23 கோடி வசூலித்துள்ள நிலையில், உலக அளவில் 40 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், 125 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த மதராஸி படத்தின் சாட்டிலைட் 80 கோடிக்கும், ஆடியோ ரைட்ஸ் பத்து கோடிக்கும் ஏற்கனவே விற்பனையாகி இருந்தது. அந்த வகையில் இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே 90 கோடி விற்பனை ஆகிவிட்டது. தற்போது திரைக்கு வந்து 40 கோடி வசூலித்துள்ள நிலையில் மொத்தத்தில் இந்தப் படம் 130 கோடி வசூலித்துள்ளது. அந்த வகையில் இப்படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் தொகை விட கூடுதலாக 5 கோடி இதுவரை வசூலித்து இருக்கிறது. அதனால் இனிமேல் மதராஸி படம் வசூலிப்பதெல்லாம் லாபக் கணக்கில்தான் சேரும் என்பது தெரியவந்துள்ளது.