போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கடந்த வாரம் தான் விஷாலின் நடிப்பில் துப்பறிவாளன் படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் விஜய்யின் 'மெர்சல்' படத்துடன் மோதுவதற்கு விஷாலுக்கு காரணமும் இல்லை. அவர் கைவசம் படமும் இல்லையே என நினைக்கலாம் இருக்கிறது. அவர் கைவசம் படம் இருக்கிறது.. ஆனால் பலப்பரீட்சை நடக்க இருப்பது இங்கல்ல. கேரளாவில். ஆம். மலையாளத்தில் முதன்முதலாக விஷால் நடித்துள்ள 'வில்லன்' படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது.
பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோவா இல்லை மெயின் வில்லனா என சொல்ல முடியாதபடி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் விஷால். ஹன்சிகாவும் இந்தப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். மஞ்சு வாரியர் மற்றும் ராசி கண்ணா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
பொதுவாக மலையாள சினிமா, தீபாவளிக்கு தங்கள் தியேட்டர்களை தமிழ்ப்படங்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்வதுதான் வழக்கம். இந்தமுறை விஜய்யின் மெர்சல் வெளியாவதால் யாரும் மலையாள படங்களை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மோகன்லாலின் வில்லன் படம் சில நாட்களாக ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், வரும் தீபாவளியன்று ரிலீஸாகலாம் என நம்பத்தகுந்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.