ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர். அதிரடி நடனம், அதிரடி ஆக்சன் என்று படத்துக்குப்படம் மிரட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது ஜெய் லவகுசா என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
மேலும், இந்த ஜெய்லவகுசாவில் நடித்துள்ள மூன்று வேடங்களில் ஒரு வேடத்தில் அரசியல் கட்சித்தலைவராக நடித்திருக்கிறார் ஜூனியர் என்டிஆர். அந்தவகையில் சம சமாஜ் பார்ட்டி என்ற கட்சியின் தலைவராக கரை வேஷ்டி கட்டி நடித்திருக்கிறாராம் அவர். அதோடு, இந்த படத்தில் தான் நடித்துள்ள மூன்று வேடங்களில் இந்த அரசியல்வாதி வேடம்தான் தனக்கு மிகவும் பிடித்தமான வேடம் என்றும் தெரிவித்துள்ளார் ஜூனியர் என்டிஆர்.
ராக்ஷி கண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் இம்மாதம் இறுதியில் வெளியாகிறது. செப்டம்பர் 21-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.