ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா தொடர் தோல்வி படங்கள் கொடுத்த வருத்ததினால், கதையம்சம் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடிக்க திட்டமிட்டார். ஆனால் அவரது எண்ணப்படி எந்த படமும் அமையாவிட்டதால், இது வரை ரவி தேஜாவின் புதிய படங்கள் குறித்த அறிவிப்போ தகவல்களோ வெளிவரவில்லை. இந்நிலையில் ரவி தேஜா இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும், ராஜா தி கிரேட் என பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரவி தேஜாவிற்கு ஜோடியாக மெஹரின் கௌர் நடிப்பதாகவும் கூறப்படுகின்றது. சாய் கார்த்திக் இசையமைக்கவிருக்கும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றதாம்.