போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நாகார்ஜூனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சொக்கடே சின்னி நயன திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாகசைதன்யா நாயகனாக நடிக்கின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. நாகார்ஜூனா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அண்ணபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு 'அல்லரி அல்லுடு' என பெயரிட படக்குழு பரிசீலனை செய்து வருகின்றனர். இப்படத்தில் நாகார்ஜூனாவின் சூப்பர் ஹிட் பாடலான 'ப்ரியா ராகாலே' பாடலை ரீமேக் செய்ய இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளாராம். நாகார்ஜூனாவின் வெற்றிப்படங்களில் ஒன்றான “ஹலோ பிரதர்” எனும் படத்தில் 'ப்ரியா ராகாலே' பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை தனது படத்தில் ரீமேக் செய்ய நாகசைதன்யாவும் ஆர்வம் காட்டி வருகின்றார்.