பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா |

மறுபடியும் திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தை பற்றி பேசவேண்டிய சூழலை உருவாக்கிவிட்டுள்ளார் கேரளாவை சேர்ந்த மாணவியான சவிதா விஜயன்.. இந்த திருமணத்தில் பலர் திலீப் வெறுப்பு மற்றும் மஞ்சு வாரியர் ஆதரவு என இருவிதமாக நிலைப்பாடு எடுக்க, காவ்யா மாதவன் மட்டும் ரசிகர்களின் கண்டனங்களில் அதிகம் சிக்காமல் இருந்தார்.. ஆனால் இப்போது காவ்யா மாதவனின் தீவிர ரசிகையாக இருந்த சவிதா விஜயன் என்கிற மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில், தனது புரபைல் பிக்சராக வைத்திருந்த அவரது படத்தை தூக்கிவிட்டு, மஞ்சு வாரியரின் புகைப்படத்தை மாற்றி வைத்துள்ளார்.. அதற்கு அவர் குறிப்பிட்டுள்ள காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் காவ்யா மாதவன் தேவையில்லாமல் விளையாடிவிட்டார் என்பதுதான்.
காவ்யா மாதவனின் சொந்த ஊரான நீலேஸ்வரத்தை சேர்ந்த சவிதா, நம்ம ஊரை சேர்ந்த ஒரு பெண், அதிலும் தான் படித்த பள்ளியில் தனக்கு முன் படித்த ஒரு பெண் சினிமாவிற்கு சென்று தனது ஊரை பெருமைப்பட வைத்தார் என்பதாலேயே காவ்யா மாதவனுக்கு ரசிகையானவர்.. மற்ற நடிகைகள் போல மலையாளத்தை மறந்து வேறு மொழிகளில் கவனம் செலுத்தாமல், கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் கண்ணியமாக இருந்ததாலேயே காவ்யா மாதவனின் ரசிகையாக இருந்தாராம் சவிதா விஜயன்.. ஆனால் இப்போது அவர் செய்திருப்பது மஞ்சு வாரியர் மீதான துரோகம் என்பதால் தன்னம்பிக்கைக்கு அடையாளமான மஞ்சு வாரியரின் போட்டோவை தனது புரபைல் படமாக மாற்றியதுடன் தன் மனதில் இருந்து காவ்யா மாதவனை தூக்கி எறிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.. இது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவிவருகிறது.