சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாளத்தில் நிவின்பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பிரேமம். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதோடு, ஒரே படத்தில் கேரளா ரசிகர்களின் கனவு கன்னியாகி விட்டார். இந்நிலையில், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த ரோலில் ஸ்ருதிஹாசன் நடித்தார். ஆனால், அவர் நடிப்பு சாய் பல்லவி அளவுக்கு இருக்காது என்று இணையதளங்களில் கலாய்த்து வந்தனர்.
அதற்கு ஸ்ருதிஹாசனும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (அக்டோபர்-7) வெளியான அப்படத்தில் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாம். சாய் பல்லவி நடித்த டீச்சர் வேடத்தில் தனது ஸ்டைலில் அபாரமாக நடித்து அசத்தியுள்ளார் ஸ்ருதிஹாசன். அதையடுத்து சாய் பல்லவியின் நடிப்புடன் ஸ்ருதியின் பர்பாமென்ஸை ஒப்பிட்டு கிண்டல் செய்து வந்த இணைய ரசிகர்களும் ஸ்ருதிஹாசனை பாராட்டி வருகிறார்கள்.