போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபாஸ், ரானா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாகுபலி படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இந்நிலையில் பாகுபலி படத்தின் டீசர் நாயகன் பிரபாஸின் பிறந்த நாளான அக்டோபர் 23ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறைவு பெற்ற பின்னர் விஷுவல் எஃபெக்ட் பணிகளுக்கு மட்டும் ஐந்து மாதங்கள் தேவைப்படும் என படக்குழுவினர் கூறுகின்றனர். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அறிவித்த படி 2017 ஏப்ரல் 28ல் வெளிவரும் என்று இயக்குனர் ராஜமௌலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்