ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சமந்தா, நித்யா மேனன், உன்னி முகுந்தன், சாய் குமார் மற்றும் பலர் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. இதனை ஜூனியர் என்.டி.ஆர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினர் இப்புகைப்படங்களையும் ஜூனியர் என்.டி.ஆர் பகிர்ந்துள்ளார். நிகழ்வில் இயக்குனர் கொரட்டாலா சிவா தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்தும் நடிகர்கள் குறித்தும் பாராட்டி பேசியுள்ளார். மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 2ல் இப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள படத்தை தணிக்கை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்