போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தேசிய விருது வென்ற கஞ்சே படத்தை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா கௌதமிபுத்ர சதர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகின்றார். பாலகிருஷ்ணாவின் 100வது படம் என்பதால் கோடிகளைக் கொட்டி படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அண்மையில் மொரோக்கோவில் ரூ 8 கோடி செலவில் போர்காட்சிகளை படமாக்கிவிட்டு படக்குழு ஐதராபாத் திரும்பியது.
பாலிவுட் பிரபலங்கள் கபீர் பெடி, ஹேமமாலினி முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் பாலகிருஷ்ணாவின் மனைவியாக நடிகை ஸ்ரேயா நடிக்கவுள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணாவின் மகனாக நடிகர் நர ரோஹித் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ராஜீவ் ரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகின்றார். 2017 சங்கராந்தி பண்டிகைக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.