ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சமீபத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றிக்கான பதிவு ஒன்றை இட்டார்.. அதில் நட்பு தான் என்னுடைய பலமும் பலவீனமும் என்று கூறிய அவர், இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமும் நட்புதான் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை தொடர்ந்து அடுத்த நாளே மலையாள நடிகர் முகேஷ், மோகன்லாலுடன் தான் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். ஆட்டோ ஒன்றின் ஓட்டுனர் இருக்கையில் முகேஷ் இருக்க, பின் இருக்கையில் அமர்ந்திருந்த மோகன்லால் இருவரையும் சேர்த்து செல்பி எடுப்பது போன்ற புகைப்படம் தான் அது.. இந்த புகைப்படத்தை எடுத்தவர் மோகன்லாலின் நண்பரும் தயாரிப்பாளருமான ஆண்டனி பெரும்பாவூர் தான்.
இந்த புகைப்படத்தை பதிவிட்ட முகேஷ், மோகன்லாலின் நட்பு எனக்கு கிடைத்தது வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம்.. இத்தனை வருட பயணத்தில் எனக்கு எல்லாவகையிலும் மோகன்லால் உறுதுணையாக, பக்கபலமாக இருந்து வருகிறார் என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த முப்பது வருடங்களாக பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'பெருச்சாழி' கடந்த 2014ல் வெளியானது. தவிர மோகன்லாலின் ஆசிகளோடு சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முகேஷ், கொல்லம் தொகுதியில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது...