ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
நேற்று முன்தினம் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்களும் திரையுலக வட்டாரத்தை சேர்ந்தவர்களும் அவரது ரசிகர்களும் மோகன்லாலுக்கு விதவிதமாக வாழ்த்து தெரிவித்தார்கள்.. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான மேஜர் ரவி,வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு மோகன்லாலின் உடலை கிண்டலடிக்கும் ஒரு சிலருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோகன்லாலை புகழ்ந்து கூறியுள்ளார்.. இதுநாள் வரை சோஷியல் மீடியாக்களில் மோகன்லாலின் உடலமைப்பை கிண்டலடித்து சிலர் தங்களது கிண்டலான கருத்துக்களை முன்வைப்பதுண்டு.
குறிப்பாக இந்த உருவத்தை வைத்துக்கொண்டு அவருக்கு எப்படி கௌரவ லெப்டினென்ட் கர்னல் பதவி கிடைத்தது என்பது என்பதுதான் பலரது கேலியாக இருந்து வருகிறது. ஆனால் இயக்குனர் மேஜர் ரவியோ, மோகன்லாலின் உடலமைப்பு அவருக்கு கிடைத்த வரம். ஆக்சன் காட்சிகளில் அவர் டூப் போடுவதில்லை. இந்த வயதிலும் அவரால் அவரது பாதத்தை வளைத்து அவரது தலையை தொட முடியும். ஆனால் அவரளவிற்கு உடலை வளைப்பதற்கோ சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதற்கோ இன்று சிக்ஸ்பேக் வைத்திருக்கும் நடிகர்களால் கூட முடிவதில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.