செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் ராம் சரண் தமிழில் சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். கடந்த தோல்வியின் காரணமாக ராம் சரண் இப்படத்தில் அதிக அக்கறை எடுத்து வருகின்றாராம். குறிப்பாக இப்படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய முற்பட்ட இயக்குனர் சுரேந்தர் ரெட்டியிடம் வேண்டாம் என மறுத்து விட்டாராம் ராம் சரண். மேலும் இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களையும் தனது மேற்பார்வையிலேயே ராம் சரண் தேர்வு செய்கின்றார்.
சல்மான்கானின் பஜ்ரங்கி பைஜான் போன்ற பல ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அசீம் மிஸ்ராவை ராம் சரண் தனது படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேர்வு செய்துள்ளாராம். இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கின்றார்.