இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான வி.ஆர்.கோபாலகிருஷ்ணன் நேற்று இரவு பாலக்காட்டில் உள்ள தனது வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம் என மூன்று ஏரியாவிலும் மாறி மாறி தனது பங்களிப்பை தந்தவர் கோபாலகிருஷ்ணன். முக்கியமாக இயக்குனர் பிரியதர்ஷனின் ஆஸ்தான துணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர்.
அதுமட்டுமல்ல, தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற 'சுந்தரா ட்ராவல்ஸ்' படத்தின் ஒரிஜனலான மலையாளம் 'ஈ பறக்கும் தளிக' படத்தின் ஸ்க்ரீன்ப்ளே இவர் எழுதியது தான். மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வந்தனம்' இவரது கைவண்ணத்தில் உருவானதுதான்.. கதாசிரியராக இருந்து ஒருகட்டத்தில் சில படங்களையும் இயக்கினார் கோபாலகிருஷ்ணன். கடந்த 20 வருடங்களாக பாலக்காட்டில் வசித்துவந்தார். சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் இப்படி திடீரென தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.