போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் அஜ்மல். தொடர்ந்து, 'திருதிரு துறுதுறு' மற்றும் 'கோ என நல்லபடங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான நடிகராக வளருவார் என எதிர்பார்த்தபோது வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி ஆகிய படங்களில் வரிசையாக சறுக்கினார் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், மலையாளத்திலும் பெரிய வாய்ப்புகள் இல்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மோகன்லாலுடன் இணைந்து 'லோஹம்' படத்தில் இளம் அரசியல்வாதியாக கொஞ்ச நேரமே வந்துபோகும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஜ்மல்.
இதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் அவருக்கு ஒரு படம் புக்காகி உள்ளது. படத்தின் பெயர் 'நேரு - தி ட்ரூ லைப்'.. நிச்சயமாக நமது முன்னாள் பிரதமர் நேரு மாமா பற்றிய கதை இல்லை. அதேசமயம் படத்தின் பெயர் நேரு என இருந்தாலும் இந்தப்படத்தில், அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய, பிசினஸ் மேக்னட்டுகளுடன் பிரண்ட்ஷிப் வைத்திருக்கும் ரௌடியாக நடிக்கிறார் அஜ்மல். ஹைப்பர் லிங்க் சினிமா என்று சொல்லப்படுகின்ற, பல சம்மபவங்களை தனித்தனி கதைகளாக சொல்லி, அனைத்திற்கும் இறுதியில் முடிச்சு போடும் புதிய பாணியில் இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம் படத்தின் இயக்குனர் ரவிகுமார்.