ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மலையாள சினிமாவில் இப்போதே கிறிஸ்துமஸ் படங்களுக்கான ஜுரம் பற்றிக்கொண்டுவிட்டது... ஒரு புதிய முயற்சியாக அனைவருமே கிறிஸ்துமஸ் தினத்தில் ஒன்றாக படங்களை ரிலீஸ் செய்து தேவையில்லாமல் வசூலை பாழாக்கி கொள்ளவேண்டாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி துல்கர் சல்மான் நடித்துள்ள 'சார்லி' வரும் டிசம்பர்-11ல் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. மார்ட்டின் பரக்கத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீண்டும் பார்வதி மேனன் இணைந்து நடித்துள்ளார். இதே தேதியில் தான் நிவின்பாலியின் 'ஆக்சன் ஹீரோ பிஜூவும் ரிலீஸாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க, மகன் நடிக்கும் படத்திற்கு நாமே போட்டியாக இருக்க கூடாது என்கிற தார்மீக காரணத்தால், மம்முட்டி தனது 'புதிய நியமம்' படத்தை கிறிஸ்துமஸ் ரிலீஸாக டிச-24ல் ரிலீஸ் செய்கிறார். 'பாஸ்கர் தி ராஸ்கல்' வெற்றிப்படத்தை தொடர்ந்து, இந்தவருடமே மம்முட்டியுடன் மீண்டும் இதில் நடித்துள்ளார் நயன்தாரா. இதில் இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். இதில் மம்முட்டிக்கு லூயிஸ் போத்தன் என்கிற லாயர் கதாபாத்திரமும் நயன்தாராவுக்கு வாசுகி என்கிற பிராமண குடும்பத்தை சேர்ந்த கதகளி கலைஞர் கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.கே.சாஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.