ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

மலையாள திரை உலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஷேன் நிகம். ஒரு பக்கம் இவரது படங்களுக்கு கிடைத்த வரவேற்பாலும் அடிக்கடி பட தயாரிப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியதாலும் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். தமிழிலும் இந்த வருடம் வெளியான மெட்ராஸ்காரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அடுத்து தற்போது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழி படமாக உருவாகியுள்ள பல்டி என்கிற படத்தில் நடித்துள்ளார் ஷேன் நிகம்.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் கேரளாவில் பல்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஷேன் நிகம் தனது ரசிகை ஒருவர் கீழே இருந்து பலமுறை அழைத்தும் அவரைக் கண்டு கொள்ளாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு இருப்பது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது, பலரும் அவரது இந்த போக்கிற்கு கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஷேன் நிகம் கூறும்போது, “இந்த வீடியோவை எடிட் செய்தவரின் திறமையை நான் பாராட்டுகிறேன். காரணம் அந்த பெண் அதற்கு முன்பாக அழைத்தபோது நான் அவரை திரும்பிப் பார்த்து அவரது அழைப்பை அங்கீகரித்தேன். அந்த காட்சிகள் இந்த வீடியோவில் கவனமாக நீக்கப்பட்டுள்ளன. இது போன்ற ரசிகர்களின் உற்சாகம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் எதற்காக அவர்களை புறக்கணித்து அவமதிக்க போகிறேன்” என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல அப்படி ஷேன் நிகமின் புறக்கணிப்புக்கு ஆளானதாக சொல்லப்படும் அந்த இளம்பெண்ணும் தனது சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு, தான் அப்படி ஷேன் நிகமை அழைத்தது தன் பக்கத்தில் இருந்த ஒரு பெண் அவருடன் கை கொடுக்க விரும்பியதால் தான் என்றும் அதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் ஷேன் நிகமிடம் தான் கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும், இந்த வீடியோ தவறாக ஷேன் நிகமை சித்தரித்து இருப்பதாகவும் கூறி விளக்கம் அளித்துள்ளார்.




