காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
மலையாள திரையுலகில் மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு சமமாக முன்னணி நடிகர் வரிசையில் தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தவர் சுரேஷ் கோபி. கடந்த 10 வருடங்களில் அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியல் பக்கம் கவனம் செலுத்தி தேசிய கட்சியான பாஜகவில் சேர்ந்து கடந்த வருடம் நடைபெற்ற எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அவையும் கூட அவரது அரசியல் பயணத்தால் மிகுந்த தாமதமாகவே வெளியாகின. பெரிய அளவில் வரவேற்பும் பெறாமல் போனது. இந்த நிலையில் தற்போது ஜேஎஸ்கே மற்றும் ஒத்தக்கொம்பன் ஆகிய படங்களில் நடித்து வந்தார் சுரேஷ் கோபி. இதில் ஜேஎஸ்கே ( ஜானகி V/s ஸ்டேட் ஆப் கேரளா ) என்கிற படம் வரும் ஜூன் 20ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாமானியர்கள் அனைவருமே சட்டம் தங்களுக்கு என்ன உரிமைகளை கொடுத்திருக்கிறது என்பதை தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்கிற நோக்கில், “உண்மைக்காக நடத்தும் யுத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையுமே ஆயுதங்களாக மாறுகின்றன” என்கிற டேக்லைனுடன் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. பிரவீன் நாராயணன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சுரேஷ்கோபியின் மகன்களில் ஒருவரான மாதவ் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.