2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படம் நரிவேட்டை. இந்த படத்தில் நடிப்பதன் மூலம் முதல் முறையாக மலையாளத் திரையரங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் சேரன். இவர்கள் இருவருடனும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வீர தீர சூரன் மூலம் தமிழில் அசத்திய சுராஜ் வெஞ்சாரமூடுவும் நடித்துள்ளார். அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார்.
இந்த மூவருமே இந்த படத்தில் அதிரடிப்படை போலீஸாக நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் இருக்கும் பழங்குடி மக்களை அகற்ற அரசியல்வாதிகள் திட்டமிடுகின்றனர். அதற்கு அதிரடி படையினரை அனுப்பி அங்கு இருப்பவர்களை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். அப்படி செல்லும் படையில் இந்த மூவரும் இடம் பெறுகின்றனர். அங்கு நடைபெறும் சம்பவங்கள் அங்கு இருக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இந்த மூவரும் எடுக்கும் நிலைப்பாடு இவை குறித்து இந்த படம் அமைந்துள்ளது.
இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் ஒரு மக்களின் உரிமைக்கான போராட்டப் படமாக இது இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. குறிப்பாக இந்த படத்தில் தமிழ் வசனங்களிலேயே பேசி நடித்திருக்கும் சேரனுக்கு மலையாள திரையுலகில் இந்த படம் ஒரு புதிய வாசலை திறந்து விடும் என்றும் உறுதியாக சொல்லலாம்.