சாராவை தவறான நோக்கத்தில் கட்டிப்பிடிக்கவில்லை : பாலிவுட் நடிகர் ராகேஷ் பேடி விளக்கம் | தர்மேந்திராவின் கடைசி படம் ஆங்கில புத்தாண்டில் ரிலீஸ் | ‛பார்டர் 2'வில் வருண் தவான் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் குடும்பத்தினர் | மம்முட்டி நடிக்க வேண்டிய படத்தில் ஜீவா | ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் மங்காத்தா | 47வது படத்தில் மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா | அரசன் பட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி | தாத்தாவாக நடிக்க மாட்டேன், அப்பாவுடன் நடிக்க ஆசை : விக்ரம் பிரபு | ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய ஜீ தமிழ் | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட் |

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் தொடரும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் உடன் இணைந்து ஷோபனா நடித்துள்ளார். ஆபரேஷன் ஜாவா புகழ் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். கடந்த மாதம் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் தொடரும் திரைப்படம் முதல் காட்சியிலிருந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று கொச்சியில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கில் இந்த படத்தை பார்க்க இயக்குனர் தருண் மூர்த்தி வந்திருந்தார். படம் பார்த்து முடித்துவிட்டு அவர் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோகன்லால் அவருக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்தார்.
அவரிடம் படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை கேள்விப்பட்டதாக கூறி தருண் மூர்த்தியை பாராட்டினார் மோகன்லால். அப்போது தருண் மூர்த்தி, தான் திரையரங்கில் இப்போதுதான் படம் பார்த்துவிட்டு வருவதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள் என்றும் கூறியபடி மோகன்லாலுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதை ரசிகர்களிடம் காட்டினார். ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்த மோகன்லாலும் அவர்களிடம் சில வார்த்தைகள் உரையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.




