படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் போசனி கிருஷ்ண முரளி. அவரை ஆந்திர போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். கடந்த ஆட்சியின் போது போசனி, பவன் கல்யாண் பற்றி பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசியுள்ளார். பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கமெண்ட் செய்துள்ளார்.
ஆட்சி மாறிய பின்பும் இதுவரையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஹைதராபாத், கச்சிபவுலியில் உள்ள போசனி வீட்டிற்குச் சென்ற அனந்த்பூர் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். அதன்பின் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளைச் செய்துள்ளனர்.
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக போசனி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரைக் கைது செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரைக் கைது செய்துள்ளதாக போசனி மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
பவன் கல்யாணை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு எடுத்துள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து பவன் கல்யாண் பற்றி அதிகமாகக் கமெண்ட் செய்த ராம்கோபால் வர்மா கைது செய்யப்படலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.