நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் ஜனப்ரிய நாயகன் என்று அழைக்கப்படும் அளவிற்கு குடும்ப ரசிகர்களை குறிவைத்து தனது படங்களை கொடுத்து வருபவர் நடிகர் திலீப். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் நடித்த படங்கள் எல்லாமே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது அறிமுக இயக்குனர் தனஞ்செய் சங்கர் இயக்கத்தில் பா பா பா என்கிற படத்தில் நடித்து வருகிறார் திலீப்.
மலையாள திரையுலகின் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏற்கனவே நடிகர்கள் வினித் சீனிவாசன், அவரது சகோதரர் தியான் சீனிவாசன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் ரெடின் கிங்ஸ்லி, சாண்டி மாஸ்டர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஆச்சரியமாக இந்த படத்தின் கதையை ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் மற்றும் அவரது காதல் கணவர் பாஹிம் ஷபார் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் தற்போது ஆவேசம் பட இயக்குனர் சித்து மாதவன் டைரக்ஷனில் நடிக்கும் புதிய படத்தை கோகுலம் பிலிம்ஸ் தான் தயாரிக்கிறது என்பதால் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இந்த பா பா பா படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அந்த வகையில் ஏற்கனவே வர்ணபக்கிட்டு, 20-20, கிறிஸ்டியன் பிரதர்ஸ் மற்றும் சைனா டவுன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மோகன்லாலுடன் இணைந்து திலீப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.