நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மோகன்லால் நடிப்பில் இந்த வருடம் அடுத்தடுத்து படங்கள் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மலையாளத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'எம்புரான்' மற்றும் 'தொடரும்', தெலுங்கில் 'விருஷபா' மற்றும் 'கண்ணப்பா' ஆகிய படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். இதில் தெலுங்கு படங்களில் கண்ணப்பா படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துவிட்ட மோகன்லால் நேற்று தான் விருஷபா படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார்.
அதே சமயம் கடந்த ஜனவரி 30ம் தேதியே மலையாளத்தில் அவர் நடித்திருந்த தொடரும் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி அந்த படம் வெளியாகவில்லை. பிப்ரவரியில் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாற்று திட்டம் இருந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் மோகன்லால்.
அதற்கு பதிலாக வரும் மார்ச் 27ம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி எம்புரான் படத்தை ரிலீஸ் செய்ய மோகன்லால் முடிவெடுத்து இருக்கிறாராம். காரணம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மோகன்லால் இயக்கி நடித்த 'பரோஸ்' திரைப்படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. தொடரும் படம் கூட தருண் மூர்த்தி என்கிற என்கிற அவ்வளவு பிரபலமில்லாத இயக்குனர் இயக்கியுள்ள ஒரு பீல் குட் படமாகத்தான் உருவாகியுள்ளது.
அதற்கு எந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியாததால் அதற்கு பதிலாக ஏற்கனவே வெற்றி கூட்டணியான பிரித்விராஜ் டைரக்ஷனில் தான் நடித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய எம்புரான் படத்தை இந்த வருடத்தில் தனது முதல் படமாக ரிலீஸ் செய்து வெற்றியை ருசிக்க முடிவு செய்துள்ளாராம் மோகன்லால். அதனாலேயே தொடரும் படத்தின் ரிலீஸை மே மாதம் தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.